BREAKING NEWS

இன்று முதல் கடுமையாக அமல்படுத்தப்படும் போக்குவரத்து சட்டங்கள்

AD
admin in உள்ளூர் செய்திகள்
Report
இன்று முதல் கடுமையாக அமல்படுத்தப்படும் போக்குவரத்து சட்டங்கள்

மோட்டார் வாகன சட்டம் இன்று முதல் கடுமையாக அமல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இயக்கப்படும் வாகனங்களை ஆய்வு செய்ய பொலிஸ் அதிகாரிகள் இன்று முதல் நிறுத்தப்படுவார்கள் என போக்குவரத்து துணை அமைச்சர் பிரசன்ன குணசேன கூறியுள்ளார்.

வீதியில் பயன்படுத்துவதற்கு தகுதியற்ற வாகனங்கள் மற்றும் வண்ணங்கள் மாற்றப்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்படும்
எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் , பல்வேறு வண்ணங்களில் மின் விளக்குகளுடன் இயங்கும் வாகனங்கள், வாகனங்களின் முன், பின் உடல் பாகத்தில் வடிவமைப்புகள் மற்றும் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் உட்பட சட்டவிரோத விடயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளன.

அதிக சத்தம் எழுப்பும் ஹோன்கள் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் கொண்ட வாகனங்கள் தொடர்பாக இன்று முதல் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து துணை அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.