BREAKING NEWS

இலங்கையிலிருந்து 126 சீனப் பிரஜைகள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
இலங்கையிலிருந்து 126 சீனப் பிரஜைகள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்!

விசா காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 126 சீனப் பிரஜைகள், விசேட விமானம் மூலம் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து மடிக்கணினிகள் மற்றும் கைபேசிகள் கைப்பற்றப்பட்டதால் இணைய மோசடி சந்தேகம் எழுந்த போதிலும், விசா விதிமீறல் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

6 பெண்கள் உட்பட 126 பேர் கடந்த மார்ச் 29-ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

சீன அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் மற்றும் சீனத் தூதரகத்தின் ஒருங்கிணைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.