BREAKING NEWS

2025 பொருளாதார வளர்ச்சி அறிக்கை வெளியீடு

PR
priya priya punidha in Latest Updates
Report
2025 பொருளாதார வளர்ச்சி அறிக்கை வெளியீடு

2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டு (ஒக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை) மற்றும் முழு ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளைத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் நிலையான விலையில் (2015) 12,508,954 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2025 ஆம் ஆண்டில் 13,128,577 மில்லியன் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இது 5.0% வளர்ச்சி என மதிப்பிடப்பட்டுள்ளது. 

பொருளாதாரத்தின் பிரதான மூன்று துறைகளான விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் முறையே 2025 ஆம் ஆண்டில் 1.4%, 7.8% மற்றும் 3.3% என்ற வீதத்தில் வளர்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், 2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.8% என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இது ஆண்டிறுதியில் பொருளாதார நடவடிக்கைகளின் நேரடி வளர்ச்சியைக் காட்டுகின்றதெனத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.