BREAKING NEWS

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 1 மாணவர்களை உள்வாங்கும் நிகழ்ச்சி

PR
priya priya punidha in Latest Updates
Report
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 1 மாணவர்களை உள்வாங்கும் நிகழ்ச்சி

நுவரெலியா கல்வி வலயத்திற்குற்பட்ட இல்டன்ஹோல் தமிழ் வித்தியாலயத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 1 மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வானது ‘மகிழ்ச்சி, புன்னகை மற்றும் அன்புடன் பாடசாலைக்கு’ எனும் தொனிப் பொருளில் பாடசாலை அதிபர் எம்.அன்னமேரி தலைமையில் வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஆர்.கிஷோகாந் கலந்து கொண்டிருந்ததுடன் மாணவர்களின் கலைநிகழ்வுகள் மற்றும் கலந்து கொண்டிருந்த மாணவர்களையும் பெற்றோர்களையும் படங்களில் காணலாம்.