BREAKING NEWS

“2,200 லீற்றர் டீசலுடன் நபர் ஒருவர் கைது”

PR
priya priya punidha in Latest Updates
Report
“2,200 லீற்றர் டீசலுடன் நபர் ஒருவர் கைது”

அம்பலாந்தோட்டை, மாமடல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றிப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2,200 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் ஹுங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹுங்கம பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்ட டீசல் கையிருப்பும் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர் இன்றைய தினம் (22) ஹம்பாந்தோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.