தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை (NWSDB), இன்று (2) முதல் ஏப்ரல் 10 வரை, பத்தரமுல்ல, பாமன்கடை, வெள்ளவத்தை, நாவல மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு 10.00 முதல் அதிகாலை 1.00 வரை, ஒருநாள் இடைவெளியுடன் (ஒவ்வொரு நாளும் அல்லாமல்) 3 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
இதற்கிடையில், பாதுக்க, ஹோமாகம, பெலன்வத்த மற்றும் பன்னிப்பிட்டிய பகுதிகளில் ஒரு நாளுக்கு 24 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இரவு 8.00 க்கு ஆரம்பமாகும்.
அதன் பின்னர், தொடர்ந்து 3 நாள்களுக்கு இடைவிடாது நீர் விநியோகம் வழங்கப்படும் என நீர்வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது.