உள்மருத்துவப் பயிற்சியை நிறைவு செய்த 436 மருத்துவர்களுக்கான புதிய பணி நியமனங்கள் மற்றும் சேவை இடங்களை சுகாதார அமைச்சு நேற்று (ஏப்ரல் 08) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நியமனம் பெற்ற மருத்துவர்கள் இன்று (ஏப்ரல் 09) முதல் வரும் 11-ஆம் திகதிக்குள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரச மருத்துவமனைகள் அல்லது சுகாதார நிறுவனங்களில் பணியைப் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த நியமனங்கள் அனைத்தும் மருத்துவர்களின் தகுதிப் பட்டியல் தரவரிசை (Merit List) மற்றும் அவர்கள் விண்ணப்பித்த விருப்பத் தேர்வுகளின் அடிப்படையில், மிகவும் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நிலவும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், அறிவியல் பூர்வமான முறையிலேயே இந்த இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த புதிய நியமனங்கள் மூலம் அரச மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு ஓரளவுக்கு நிவர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.