BREAKING NEWS

மீகஸ்வெவில் சட்டவிரோத பெட்ரோல் சேகரிப்பு

PR
priya priya punidha in Latest Updates
Report
மீகஸ்வெவில் சட்டவிரோத பெட்ரோல் சேகரிப்பு

அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் 604 லீற்றர் பெற்றோலைச் சேகரித்து வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் நேற்று (18) பொலன்னறுவை, மீகஸ்வெவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சில்லறை விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மெதிரிகிரிய, மீகஸ்வெவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலின் பேரில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து இந்த பெற்றோல் கையிருப்புகளைச் சேகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் காலங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் இவை சேகரிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர் இன்று (19) ஹிங்குராக்கொட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.