BREAKING NEWS

“தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்திக்க அனுர சம்மதம்”

PR
priya priya punidha in Latest Updates
Report
“தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்திக்க அனுர சம்மதம்”

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று (16) தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

ஜனாதிபதி அநுர, தற்போது தமது தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிப்பதில்லை, என மனோ கணேசன், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய போது, பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார். 

இதையடுத்தே இன்று இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அவசர பிரச்சினைகள் குறித்து உரையாடுவதற்காக மனோ கணேசன் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அடுத்த வாரம் தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்திப்பதற்கு ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.