BREAKING NEWS

மீண்டும் விலை உயர்வு அபாயம்: அத்தியாவசிய உணவுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
மீண்டும் விலை உயர்வு அபாயம்: அத்தியாவசிய உணவுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மூண்டுள்ள போர் காரணமாக, இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச கடல்வழிப் பாதைகளில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகள் மற்றும் கப்பல் வருகையில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் காரணமாகவே இந்த விலை உயர்வு அபாயம் ஏற்பட்டுள்ளது. “இலங்கை தனது உணவுத் தேவையில் பெரும் பகுதியை இறக்குமதியையே நம்பியுள்ளது. எனவே, சர்வதேசச் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் நேரடியாக எங்களைப் பாதிக்கும்” என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் உணவுத் தேவையில் பெரும் பகுதி வெளிநாடுகளிலிருந்தே வருகின்றன:

பருப்பு: 100% இறக்குமதி

உருளைக்கிழங்கு: 80% இறக்குமதி

வெங்காயம்: 80% இறக்குமதி

விலை உயர்வுக்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும், வர்த்தகர்கள் அநியாயமாக விலைகளை உயர்த்துவதைத் தடுக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும், பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யப் போவதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.