BREAKING NEWS

எரிபொருள் நெருக்கடியில் மின் துண்டிப்பு எச்சரிக்கை – குமார ஜயகொடி

PR
priya priya punidha in Latest Updates
Report
எரிபொருள் நெருக்கடியில் மின் துண்டிப்பு எச்சரிக்கை – குமார ஜயகொடி

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். 

இன்று (17) நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படுமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

“இதுவரை ஒரு மணிநேரம் கூட மின்வெட்டு இன்றி நாம் கொண்டு செல்கிறோம், ஆனால் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய ஒரு காலம் வரவும் கூடும்” என அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.