BREAKING NEWS

ராதிகா சரத்குமார் நடிப்பில் ‘தாய் கிழவி’ 62 கோடி வசூல்

PR
priya priya punidha in சினிமா
Report
ராதிகா சரத்குமார் நடிப்பில் ‘தாய் கிழவி’ 62 கோடி வசூல்

சிவகார்த்திகேயனின் SK தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி 27 ஆம் திகதி வெளியான திரைப்படம் தாய் கிழவி. 

அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இப்படம் குடும்பப் பொறுப்பு, தாய்ப்பாசம் மற்றும் நிதி விழிப்புணர்வு ஆகியவற்றை பேசும் உணர்வுபூர்வமான படமாக அமைந்துள்ளது. 

ஒரு சாதாரண குடும்பத்தில் திடீர் ஏற்படும் மருத்துவ அவசர நிலை அந்தக் குடும்பத்தின் நிதி நிலையை பாதிக்கிறது என்பதை மிகவும் உணர்ச்சி கரமாக இந்த படம் காட்டுகிறது. 

இந்த வருடம் வெளியான படங்களில் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு திரைப்படமாக தாய்கிழவி அமைந்துள்ளது. 

குடும்பமாக சென்று மக்கள் இப்படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர், ராதிகாவின் நடிப்பிற்கு மக்கள், பிரபலங்கள் என அனைவரும் பெரிய அளவில் பாராட்டி வருகிறார்கள். 

இதுவரை இப்படம் மொத்தமாக 62 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.