BREAKING NEWS

“தனித்தே நிற்போம்.. வெற்றி நமதே!” – நிர்வாகிகளுக்கு விஜய் இட்ட கட்டளை.

DH
dhusanthi dhusi in Tamilnadu
Report
“தனித்தே நிற்போம்.. வெற்றி நமதே!” – நிர்வாகிகளுக்கு விஜய் இட்ட கட்டளை.

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் விஜய் இணையப்போவதாக வெளியான தகவல்களுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

‘ஜனநாயகன்’ பட விவகாரம் மற்றும் கரூர் சிபிஐ விசாரணை மூலம் பாஜக தரப்பிலிருந்து விஜய்க்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், அதன் காரணமாகவே அவர் அதிமுக கூட்டணியை நோக்கி நகர்வதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், “நாம் தனித்தே போட்டியிடப் போகிறோம்; கண்டிப்பாக வெற்றி பெறுவோம்” எனத் தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார்.

முதற்கட்ட வேட்பாளர் நேர்காணலை விஜய் ஏற்கனவே முடித்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட நேர்காணல் நாளை அல்லது நாளை மறுநாள் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றும், அதனைத் தொடர்ந்து விஜய் தமிழ்நாடு முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிடைக்கப்பெற்றுள்ள முதற்கட்டத் தகவல்களின்படி:

விஜய்: பெரம்பூர் தொகுதி

புஸ்ஸி ஆனந்த் (பொதுச்செயலாளர்): தி.நகர் தொகுதி

ஆதவ் அர்ஜுனா: வில்லிவாக்கம் தொகுதிஆகிய இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது