அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி, நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (17) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி:
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை (Buying Rate): ரூ. 307.52 இலிருந்து ரூ. 307.73 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலரின் விற்பனை விலை (Selling Rate): ரூ. 315.13 இலிருந்து ரூ. 315.30 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலர் மட்டுமன்றி, வளைகுடா நாடுகளின் நாணயங்கள் உள்ளிட்ட ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று சரிவைக் கண்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.