BREAKING NEWS

பக்தாத்தில் அமெரிக்கத் தூதரகத்துக்கு மீண்டும் ட்ரோன்,ரொக்கெட் தாக்குதல்

PR
priya priya punidha in Latest Updates
Report
பக்தாத்தில் அமெரிக்கத் தூதரகத்துக்கு மீண்டும் ட்ரோன்,ரொக்கெட் தாக்குதல்

ஈராக் தலைநகர் பக்தாத்தின் அதீத பாதுகாப்பு வலயமான ‘கிரீன் சோன்’ (Green Zone) பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது, இன்று அதிகாலை (உள்ளூர் நேரம்) மீண்டும் ட்ரோன் மற்றும் ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

தூதரக வளாகத்திற்கு அருகே பலத்த வெடிச்சத்தம் கேட்டதுடன், அங்கிருந்து கரும்புகை வெளியேறுவதையும் காண முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் மூன்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அவற்றில் இரண்டை அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்திய நிலையில், ஒன்று தூதரக வளாகத்திற்குள் விழுந்து ஒரு சிறிய தீ விபத்தை ஏற்படுத்தியதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.