BREAKING NEWS

ஆப்பிரிக்கக் கிண்ணக் கால்பந்து: செனகல் அணிக்கு வழங்கப்பட்ட கிண்ணம் பறிப்பு!

DH
dhusanthi dhusi in விளையாட்டு
Report
ஆப்பிரிக்கக் கிண்ணக் கால்பந்து: செனகல் அணிக்கு வழங்கப்பட்ட கிண்ணம் பறிப்பு!

ஆப்பிரிக்கக் கிண்ணக் கால்பந்து (CAF) தொடரின் இறுதிப் போட்டியில் நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மைதானத்தை விட்டு வெளியேறிய செனகல் வீரர்களுக்கு, ஆப்பிரிக்கக் கால்பந்து கூட்டமைப்பு கடும் தண்டனை விதித்துள்ளது. இதன் விளைவாக, செனகல் வென்றதாக அறிவிக்கப்பட்ட சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டு, மொரோக்கோ வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொரோக்கோவின் ரபாத் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் போது, செனகல் அடித்த கோல் ஒன்றை நடுவர் நிராகரித்தார். அதனைத் தொடர்ந்து மொரோக்கோவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த செனகல் வீரர்கள், போட்டியை 16 நிமிடங்கள் தாமதப்படுத்தி மைதானத்தை விட்டு வெளியேறினர்.

மீண்டும் ஆரம்பமான போட்டியில் மொரோக்கோ வீரர் பிராஹிம் டயஸ் (Brahim Diaz) உதைத்த பெனால்டி பந்தை செனகல் கோல்கீப்பர் எடுவார்ட் மெண்டி தடுத்தார். பின்னர் கூடுதல் நேரத்தில் செனகல் வீரர் பாப்பே குயே (Pape Gueye) ஒரு கோல் அடிக்க, செனகல் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாகக் கொண்டாடப்பட்டது.

எனினும், செனகல் வீரர்களின் நடத்தையினால் போட்டி விதிகள் மீறப்பட்டதாக மொரோக்கோ விடுத்த மேன்முறையீட்டை CAF ஏற்றுக் கொண்டது. விதிமுறைகளின்படி செனகல் அணி தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டு, மொரோக்கோ 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடரின் தோல்வியைத் தொடர்ந்து மொரோக்கோ அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் வாலிட் ரெக்ராகுய் (Walid Regragui) தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக முகமது வஹ்பி புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.