BREAKING NEWS

முடிவுக்கு வந்த ‘ஜனநாயகன்’ சர்ச்சை? மும்பையில் மறு ஆய்வு நிறைவு!

DH
dhusanthi dhusi in சினிமா
Report
முடிவுக்கு வந்த ‘ஜனநாயகன்’ சர்ச்சை? மும்பையில் மறு ஆய்வு நிறைவு!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கான மறு ஆய்வு (Re-examination) பணிகள் மும்பையில் நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் ரீதியான மற்றும் சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து ஏற்கனவே தணிக்கைக் குழு கேள்வியெழுப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்து, மும்பையில் நடைபெற்ற மறு ஆய்வின்போது அந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்துத் தீவிரமாகச் சரிபார்க்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு, ‘ஜனநாயகன்’ படத்தை இந்தியத் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் நேரில் பார்வையிட வேண்டும் எனத் தணிக்கைக் குழு (Censor Board) பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது. தேர்தல் ஆணையத்தின் பச்சைக்கொடி கிடைத்தால் மட்டுமே படத்தின் வெளியீடு உறுதியாகும் என்பதால், இரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.