BREAKING NEWS

அமெரிக்க டொலருக்கு எதிராக மீண்டும் வலுவடையும் இலங்கை ரூபாய்!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
அமெரிக்க டொலருக்கு எதிராக மீண்டும் வலுவடையும் இலங்கை ரூபாய்!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (18) மீண்டும் அதிகரிப்பைக் காட்டியுள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம் பின்வருமாறு:

கொள்வனவு விலை: 307.73 ரூபாவிலிருந்து 307.54 ரூபாவாகக் குறைந்துள்ளது.

விற்பனை விலை: 315.30 ரூபாவிலிருந்து 315.07 ரூபாவாகக் குறைந்துள்ளது.

அமெரிக்க டொலர் மட்டுமன்றி, வளைகுடா நாடுகளின் நாணயங்கள் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாய் இன்று குறிப்பிடத்தக்களவு பலமடைந்துள்ளது. இது இறக்குமதித் துறையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.