BREAKING NEWS

ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்று

PR
priya priya punidha in Latest Updates
Report
ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்று

இஸ்ரேலின் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் பாதுகாப்புக் கட்டமைப்புகள் குறித்து தகவல்களைச் சேகரித்து இஸ்ரேலின் உளவாளிப் பிரிவான மொசாட் அமைப்பிடம் பகிர்ந்ததாக, கௌரௌஷ் கெய்வானி எனும் நபர் கைதுசெய்யப்பட்டார்.

கடந்த 2025 ஜூன் மாதம் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் நடைபெற்ற 12 நாள் போரின்போது கௌரௌஷ் கெய்வானி சிக்கியதாகவும், அவர் 6 ஐரோப்பிய நாடுகளில் உளவாளிக்கான பயிற்சிகளைப் பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கௌரௌஷ் கெய்வானியின் குற்றம் உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, ஈரானின் அதிகாரிகள் இன்று (18) அறிவித்துள்ளனர்.