BREAKING NEWS

ஈழத்திரைப்படம் “அந்தோனி” உலக திரையரங்குகளில்

PR
priya priya punidha in சினிமா
Report
ஈழத்திரைப்படம் “அந்தோனி” உலக திரையரங்குகளில்

இசைஞானி இளையராஜாவின் இசையில் ஈழத்திரைப்படம் “அந்தோனி” சர்வதேச திரையரங்குகளில் வௌியிடப்பட்டது.

மீனவர்களின் அன்றாட வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இனிய படைப்பாக யாழ் மண்ணில் ஓர் மீனவ கிராமத்தின் எழிலையும் அடிப்படையாக கொண்டுள்ளது.
அதற்கு நம்ம இசைஞானி இளையராஜாவின் இசையும் பக்க பலமாக வலுசேர்த்துள்ளது.

ஓசை பிலிம்ஸ் கலைவளரி ரமணதாஸ் மற்றும் சுகந்தினி தயாரிப்பில், மாஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் உருவாகியிருக்கிறது.
“அந்தோனி” திரைப்படத்தில் ஒவ்வொருவரும் தமக்கு வழங்கப்பட்ட கதாப்பாத்திரத்தை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள் .
குறிப்பாக நடிகர் வின்சென்ட் நகுல் (கயல் வின்சென்ட்) அந்தோனி கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அதே போல் சுதர்சன், பானு, உட்பட அனைவரின் நடிப்பும் சிறப்பு.
இத்திரைப்படத்தை பார்க்க மொழி அவசியம் இல்லை. ஏற்கனவே மீனவ சமூகத்தை சார்ந்த பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் இதுவும் அந்த வகையில் இன்னுமொரு சிறந்தப்படைப்பாகவே பார்க்கலாம். அதுவும் எமது மண்ணில் இருந்து சர்வதேச அங்கீகாரத்துடன் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் எனும் போது பெருமைப்பட வேண்டிய விடயம்..

ஒவ்வொரு மகளும் தன் தந்தைக்கு இன்னொரு அம்மாவாகவே இருக்க விரும்புவாள். என்பதை உணர்வு பூர்வமாக இத்திரைக்கதை அமைந்துள்ளது.

மார்ச் மாதம் 13ம் திகதி முதல் பல தேசங்களில் “அந்தோணி” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி பயணத்தை ஆரம்பித்தது.

இலங்கை இந்திய கூட்டுத்திரைப்படங்கள் உருவாகிய காலங்களும் எமது திரை வரலாற்றில் உண்டு. ஈழத்து நாடக கலைஞர் ஏ. பி. மகாதேவன் தயாரிப்பில் பி. எல். பாலா இயக்கிய திரைப்படமான “சபாபதி” திரைப்படம் 1962ம் ஆண்டு வெளியானது. இதற்கான இசையை இந்திய திரைப்படங்களில் புகழ் பூத்த இசையமைப்பாளர் ஏ. எம். ராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமன்றி இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆர். முத்துசாமி போன்றோரும் சிங்கள மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்ததுடன் ஜிக்கி, ஜமுனாராணி போன்ற பாடகிகளும் சிங்களப் பாடல்களைப் பாடியுள்ளனர். அதேபோல் நங்கூரம், நீலக்கடலின் ஓரத்திலே, பைலட் பிரேம்நாத் போன்ற படங்களிலும் பங்களிப்புள்ளது. ஆனால் “அந்தோணி” போன்ற திரைப்படத்தால் சர்வதேச அங்கீகாரம் ஈழக் கலைஞர்களுக்கு கிட்டும் வாய்புள்ளது.

அன்று ஈழத்தின் “சபாபதி” திரைப்படத்துக்கு ஏ. எம். ராஜா.
இன்று “அந்தோனி” திரைப்படத்துக்கு இசைஞானி இளையராஜா.
ஓர் நெடுந்ததூரப் பயணம் சிறப்பாக தொடர எமது கலைஞர்களின் பங்களிப்பு போல் இரசிகர்களின் கண்ணோட்டமும் அவசியம்.

ஊடகவியாளர்
A. K. ELANGO
இலங்கை