BREAKING NEWS

கடலில் மூழ்கி 16 வயது மாணவன் உயிரிழப்பு

PR
priya priya punidha in Latest Updates
Report
கடலில் மூழ்கி 16 வயது மாணவன் உயிரிழப்பு

ஹபராதுவ, ஹெண்டிவத்த பகுதியில் கடலில் நீராடிய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் மேலும் சில நண்பர்களுடன் இணைந்து கடலில் ‘சறுக்கு விளையாட்டில்’   ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்த விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, பிரதேசவாசிகள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவர் மீட்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹபராதுவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.