BREAKING NEWS

சீதா எலிய ஆலய முன்றலில் நூலிழையில் உயிர் தப்பிய முச்சக்கர வண்டி!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
சீதா எலிய ஆலய முன்றலில் நூலிழையில் உயிர் தப்பிய முச்சக்கர வண்டி!

நுவரெலியா – சீதை அம்மன் ஆலயம் முன்பாக அமைந்துள்ள பாதசாரிகள் கடக்கும் இடத்தில், அதிவேகமாக வந்த மோட்டார் வாகனம் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் 18.03.2026 அன்று மாலை 05.02 மணியளவில், ஒரு முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அச்சமயம், ஓட்டுநருடன் மேலும் இரண்டு பயணிகள் அந்த முச்சக்கர வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

காணொளி பதிவின் அடிப்படையில், வலது திசையிலிருந்து அதிக வேகத்தில் வந்த மோட்டார் வாகனம், பாதசாரிகள் கடக்கும் இடத்தை அண்மித்த போது, முச்சக்கர வண்டி மீது மோதும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை நேரில் கண்டவர்கள், “சில வினாடிகள் தாமதமாக இருந்திருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்தது” என தெரிவித்துள்ளனர்.

இவ்வாலயம் தினசரி ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தரும் முக்கிய வழிபாட்டு தலமாகும். இத்தகைய சூழலில் பாதுகாப்பற்ற மற்றும் அதிவேக ஓட்டம் பயணிகளின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிஸாரின் போக்குவரத்து பிரிவு பொறுப்பாளர் குமார யாப்பா தெரிவித்ததாவது, சம்பவத்தில் தொடர்புடைய மோட்டார் வாகனத்தின் பதிவு எண் முச்சக்கர வண்டி கேமராவில் தெளிவாகப் பதிவாகவில்லை. இருப்பினும், ஆலயத்திலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உள்ள பாதுகாப்பு கேமராக்கள் மூலம் வாகனத்தையும் ஓட்டுநரையும் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், குறித்த வாகன ஓட்டுநரை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.