BREAKING NEWS

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அறுவை சிகிச்சை!

DH
dhusanthi dhusi in அரசியல்
Report
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அறுவை சிகிச்சை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சை (Surgery) ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் இன்று (19) நடைபெற்ற விவாதத்தின் போதே இந்தத் தகவல் வெளியிடப்பட்டது. ரணில் விக்ரமசிங்கவுக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சை மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ரவி கருணாநாயக்க உறுதிப்படுத்தினார்.

அறுவை சிகிச்சை முடிந்துள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க விரைவில் பூரண குணமடையப் பிரார்த்திப்பதாக ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார். எனினும், எந்தக் காரணத்திற்காக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்த மேலதிக விபரங்கள் எதனையும் ரவி கருணாநாயக்க சபையில் வெளியிடவில்லை.