BREAKING NEWS

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எரிபொருள் முன்னுரிமை வழங்கும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

PR
priya priya punidha in Latest Updates
Report
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எரிபொருள் முன்னுரிமை வழங்கும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் .இந்த வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு சுற்றுலாப் பயணிகள் தமது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது உரிய அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகுமென இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதுமுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இந்த விசேட நடைமுறையை உடனடியாக அமல்படுத்துமாறு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எவ்வித அசௌகரியமுமின்றி தமது பயணங்களை முன்னெடுப்பதை உறுதி செய்யவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.