BREAKING NEWS

தனியார் பேருந்து சேவைகள் 50% குறையும் அபாயம்!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
தனியார் பேருந்து சேவைகள் 50% குறையும் அபாயம்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) சாலைகளில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதில் நிலவும் முறையற்ற தன்மை காரணமாக, தனியார் பேருந்து சேவைகள் பாதியாகக் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்படும் 60 லீற்றர் எரிபொருள் ஒரு பேருந்தின் நாளாந்தத் தேவைக்குப் போதுமானதாக இல்லை.

சில சாலைகளில் எரிபொருள் இல்லாததால் பேருந்து உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

எரிபொருள் நிரப்ப அதிக நேரம் செலவிடப்படுவதால், வழமையான பேருந்து நேர அட்டவணைகளைப் பின்பற்ற முடியாமல் உள்ளது.

இந்த நிலைமை நீடித்தால், வரும் நாட்களில் தனியார் பேருந்து சேவைகள் 50 சதவீதத்தால் குறைக்கப்படக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன எச்சரித்துள்ளார்.