BREAKING NEWS

ராக்ஷாவ தோட்ட மக்களின் முறைப்பாடுகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
ராக்ஷாவ தோட்ட மக்களின் முறைப்பாடுகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

‘டிட்வா’ சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி ராக்ஷாவ தோட்ட மக்களின் முறைப்பாடுகள் குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்மட்ட அதிகாரிகள் நேரடி கள ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த நவம்பர் 27 ஆம் திகதி ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளி காரணமாக மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வாழும் மலையகப் பெருந்தோட்ட மக்கள் பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டனர். குறிப்பாக, ராக்ஷாவ தோட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்ததுடன், அடிப்படை வசதிகள் மற்றும் அரச நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதில் நிர்வாக ரீதியான தடைகளையும், மனித உரிமை மீறல்களையும் எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இம்மக்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் ராக்ஷாவ தோட்டத்திற்கு நேரடியாக விஜயம் செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடிய அதிகாரிகள், அங்கு நிலவும் மனித உரிமை மீறல்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்துக் கேட்டறிந்தனர். இவற்றுக்குத் தேவையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வதில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மலையக உபகுழு அங்கத்தவர் ஜீவரட்னம் சுரேஷ், சுயசக்தி நிறுவனம் மற்றும் IPEN நிறுவனம் ஆகியன முக்கிய பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.