BREAKING NEWS

இலங்கைக் கடலில் 3 ட்ரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
இலங்கைக் கடலில் 3 ட்ரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு!

இலங்கையின் கடல் எல்லைக்குள் சுமார் 3 ட்ரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு இருப்பு இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாட்டின் எரிசக்தித் தேவையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் (PDASL) தலைவர் சாலிய விக்கிரமசூரியவை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள தகவலின்படி, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு (EEZ) அடியில் “பல பில்லியன் பீப்பாய்கள்” மசகு எண்ணெய் (Crude Oil) இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் ‘Explore Sri Lanka’ என்ற திட்டத்தின் கீழ் அகழ்வாராய்ச்சி உரிமங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வணிக ரீதியிலான அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்பட இன்னும் சில காலம் எடுக்கும் என்றாலும், பல உலகளாவிய முன்னணி நிறுவனங்கள் இலங்கையின் கடல்சார் வளங்கள் மீது ஏற்கனவே ஆர்வம் காட்டியுள்ளன. இது தசாப்தங்களாக மந்த நிலையில் இருந்த இலங்கையின் எரிசக்தித் துறைக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.