BREAKING NEWS

‘தளபதி’யின் அதிரடி வியூகம்! – தேர்தல் களத்தில் தவெக தனிப்பயணம்.

DH
dhusanthi dhusi in Tamilnadu
Report
‘தளபதி’யின் அதிரடி வியூகம்! – தேர்தல் களத்தில் தவெக தனிப்பயணம்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) தனித்துப் போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இதுவரை 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜய் நேரடியாகச் சந்தித்துள்ளார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேட்பாளர் பட்டியல் தயாராகியுள்ளது.

தேர்தல் பணிகளை உற்சாகப்படுத்த 2,000 கிளை முதல் மாநில அளவிலான நிர்வாகிகளுடன் விஜய் புகைப்படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

பெரம்பூர், வில்லிவாக்கத்தில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்கி, 25 நாட்கள் தமிழகம் முழுவதும் தீவிரப் பயணம் மேற்கொள்ள வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே தவெக எடுத்துள்ள இந்த வேகம் மற்ற அரசியல் கட்சிகளை உற்றுநோக்க வைத்துள்ளது.