அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலனைக்கு எடுத்துகொள்ள உயர் நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.
சுரேஷ் சலே பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்மனுவை, இலங்கை விமானபடையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஷாந்த ஜயதிலக தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.