மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டணங்களை இன்று (23) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10 ரூபாயினால் அதிகரிப்பதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
ஆரம்பக் கட்டணம் 100 ரூபாயிலிருந்து 110 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மேலதிக கிலோமீட்டருக்கும் அறவிடப்படும் கட்டணம் 80 ரூபாயிலிருந்து 90 ரூபாயாக திருத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பைக் கருத்திற் கொண்டு, மாகாண ரீதியில் பொதுப் போக்குவரத்து கட்டணங்களில் ஏற்பட்டுள்ள தாக்கத்தின் ஒரு பகுதியாக இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.