இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் மீதான தாக்குதல் திட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இன்று (23.03.2026) தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் (Energy Infrastructure) மீதான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அமெரிக்கப் போர் அமைச்சுக்கு (Pentagon) அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
ஈரானுக்கு எதிரான நேரடித் தாக்குதல்கள் தீவிரமடைந்து வந்த நிலையில், உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் மின் தட்டுப்பாடு குறித்த அச்சம் நிலவியது. ட்ரம்பின் இந்த 5 நாள் காலக்கெடு, ஒரு தற்காலிக போர் நிறுத்தமாகவோ அல்லது இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கான முகாந்திரமாகவோ இருக்கலாம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.