BREAKING NEWS

கொஹுவலையில் சீன யுவதி கொடூரக் கொலை!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
கொஹுவலையில் சீன யுவதி கொடூரக் கொலை!

கொஹுவல, களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 26 வயதுடைய சீன யுவதி ஒருவர் நேற்று (23) திங்கட்கிழமை மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யுவதி தங்கியிருந்த அறைக்குள்ளேயே அவர் மீது கூரிய ஆயுதத்தால் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்த யுவதியின் சடலத்தை மீட்ட பொலிஸார், இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, உயிரிழந்த யுவதியின் முன்னாள் காதலனே இந்தப் படுகொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சந்தேக நபரான அந்த இளைஞனும் ஒரு சீனப் பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தலைமறைவாகியுள்ள சீனச் சந்தேக நபரைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.