BREAKING NEWS

மாலை நேரங்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

PR
priya priya punidha in Latest Updates
Report
மாலை நேரங்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மின்வெட்டை அமுல்படுத்த எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் மின்சார உற்பத்திக்கு அதிக எரிபொருள் பயன்படுத்தப்படுவதால், தேவையற்ற மின்விளக்குகளை அணைத்து ஒத்துழைக்குமாறு மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், மே மாதம் வரை தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், மின்வெட்டைத் தவிர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.