கொக்கட்டிச்சோலை பகுதியில் கணவனால் தீவைக்கப்பட்டதாக கூறப்படும் மனைவி, இரண்டு மாதங்களின் பின்னர் நேற்று (24) உயிரிழந்தார்.
கடந்த ஜனவரி 17 ஆம் திகதி சம்பவம் இடம்பெற்றதையடுத்து, காயமடைந்த அவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார். பின்னர் 10 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவன் கைது செய்யப்பட்டு, ஏப்ரல் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், வீட்டில் இருந்தபோது அவரது உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.