BREAKING NEWS

நானுஓயாவில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீ!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
நானுஓயாவில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீ!

நுவரெலியா, ஒலிபண்ட் பகுதியில் நேற்று (24) இரவு ஆரம்பமான காட்டுத் தீ, இன்று (25) காலை நானுஓயா கிளாசோ தோட்டத்தின் மேல்பகுதி காடுகளுக்குப் பரவித் தீவிரமாக எரிந்து வருகின்றது.

கடுமையான வெயில் மற்றும் காற்றின் வேகம் காரணமாகத் தீ வேகமாகப் பரவி வருவதால், அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாகக் காணப்படுகின்றது.

காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாடுவதற்காகச் சில விசமிகள் திட்டமிட்டு வைக்கும் தீயினாலேயே இவ்வாறான அனர்த்தங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தத் தீயினால் அரிய வகை மரங்கள் எரிந்து சாம்பலாவதுடன், காட்டில் வாழும் விலங்குகள் மற்றும் பறவை இனங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி, ஒட்டுமொத்தச் சூழலுக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

தற்போது மலையகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக ஆங்காங்கே இவ்வாறான தீ விபத்துகள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.