இலங்கையில் நிலவி வரும் காலநிலைப் மாற்றங்களுக்கு மத்தியில், இன்று (25) நாட்டின் மிகக்குறைந்த வெப்பநிலையாக 7.8°C நுவரெலியாவில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுவரெலியாவைத் தொடர்ந்து ஏனைய மலையகப் பகுதிகளிலும் வெப்பநிலை கணிசமாகக் குறைந்துள்ளது. பண்டாரவளையில் 14.0°C, பதுளையில் 17.5°C மற்றும் கட்டுக்காஸ்தோட்டையில் 19.7°C வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
மலையகத்தில் குளிர் நிலவும் அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் வெப்பமான காலநிலை நிலவுகிறது. குறிப்பாக முல்லைத்தீவில் அதிகூடிய குறைந்தபட்ச வெப்பநிலையாக 27.4°C பதிவாகியுள்ளது.
கொழும்பில் 26.2°C மற்றும் காலியில் 25.9°C வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒரே நாட்டுக்குள் இருவேறு துருவங்களாக நிலவும் இந்த வெப்பநிலை மாற்றம் பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.