அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் (Andrew Patrick) ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில், இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களுக்குப் பிரித்தானிய அரசாங்கம் தனது பூரண ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.
சட்டச் சிக்கல்களை நீக்கி, மாகாண சபைத் தேர்தல்களை மிக விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
தற்போதைய காலத்திற்கு ஏற்ப இலங்கை அரசாங்கம் சேவையை நவீனமயமாக்குவதற்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை வழங்கப் பிரித்தானியா தயாராக உள்ளதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
புத்தளம் மாவட்டத்தில் சூரிய மற்றும் காற்று சக்தி வளங்களைப் பயன்படுத்துவது குறித்தும், குறிப்பாகக் கடலில் காற்றாலைகளை (Offshore Wind) அமைப்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையர்கள் காட்டிய மன உறுதி மற்றும் மீளெழுச்சித் திறனை உயர்ஸ்தானிகர் வெகுவாகப் பாராட்டினார்.