போத்தல – கோடகந்த பகுதியில் சுற்றுலா விசாவில் தங்கியிருந்து, பாரிய அளவிலான இணைய நிதி மோசடிகளில் (Online Financial Fraud) ஈடுபட்டு வந்த 9 வியட்நாம் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பூஸ்ஸ இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, காலி பொலிஸார் மேற்கொண்ட அதிரடிச் சோதனையின் போதே இந்த குழு பிடிபட்டது.
மோசடிக்காகப் பயன்படுத்தப்பட்ட 84 அதிநவீன கையடக்கத் தொலைபேசிகள், ஒரு மடிக்கணினி (Laptop) மற்றும் ஒரு மேசைக் கணினி ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவர்கள் சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி இலங்கைக்குள் நுழைந்து, மறைமுகமான முறையில் இணைய வழியிலான பணப் பரிமாற்ற மோசடிகளை முன்னெடுத்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக போத்தல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், காலி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.