மோட்டார் வாகன ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க நேற்று இரவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
வாகன பதிவு செய்தலின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் வழங்கிய தகவலின்படி, ஒரு கெப் வாகனத்தின் செசி இலக்கத்தை மாற்றி மோசடியாக பதிவு செய்ய உதவியதாக அவர்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கமல் அமரசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.