BREAKING NEWS

நளிந்த ஜயதிஸ்ஸவை எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
நளிந்த ஜயதிஸ்ஸவை எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

வைத்தியர்களின் இடமாற்றங்களில் அரசியல் தலையீடு இருப்பதைச் சுட்டிக்காட்டி, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் தேவைக்காகத் தயாரிக்கப்படும் இடமாற்றப் பட்டியல்களை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை எனச் சங்கத்தின் உதவிச் செயலாளர் ஹன்சமால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

வைத்தியர்கள் யாருக்கும் கடன்பட்டவர்களோ, அஞ்சியவர்களோ அல்ல; எப்போதும் தலைநிமிர்ந்து பணியாற்றுபவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியர்களைக் கீழ்நிலை ஊழியர்களாக நடத்தினால், சுகாதார அமைச்சின் தற்போதைய சுமூகமான இயங்குதன்மை பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.