BREAKING NEWS

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

PR
priya priya punidha in Latest Updates
Report
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் கடுமையான மின்னலுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (02) பிற்பகல் 1.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும்.

அதன்படி, பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மேற்கொண்ட பகுதிகளில் சில இடங்களில் கடுமையான மின்னலுடன் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழையின் போது சில இடங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய சேதங்களை குறைப்பதற்காக பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.