தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் இன்று (02) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில், மலையக மக்கள் எதிர்கொள்கின்ற கல்வி, வீடு மற்றும் காணி தொடர்பான பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. அந்த பிரச்சினைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது குறித்தும் பேசப்பட்டது. ஜனாதிபதி இதற்கு விசேட கவனம் செலுத்தினார்.
மேலும், மலையகப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க தகுதியான தமிழ் மொழி மூல ஆசிரியர்களை விரைவாக நியமிக்க வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி. திகாம்பரம், வி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



