ஈரானின் எஞ்சியுள்ள உள்கட்டமைப்புகளை அழிக்கும் பணியை அமெரிக்க இராணுவம் இன்னும் “ஆரம்பிக்கவே இல்லை” என்று டொனால்ட் ட்ரம்ப் புதிய அச்சுறுத்தல்களை விடுத்துள்ளார்.
“உலகிலேயே மிகவும் வலிமையான எமது இராணுவம், ஈரானில் எஞ்சியுள்ளவற்றை அழிக்கும் பணியை இன்னும் தொடங்கவில்லை” என டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரானின் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் அடுத்ததாக இலக்கு வைக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
“புதிய ஆட்சித் தலைமை என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதை மிக விரைவாக செய்ய வேண்டும்” என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ட்ரம்பின் இந்த நேரடி மிரட்டல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.