ஈரானில் வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் F-15 போர்விமானத்தின் விமானி ஒருவர், ஈரானின் உட்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க விமானப்படையின் விசேட பயிற்சி பெற்ற ‘பாரா ரெஸ்க்யூ’ (Pararescue) படையினர், ஈரானின் கூசிஸ்தான் மாகாணத்திற்குள் ஊடுருவி இந்த தேடுதல் மற்றும் மீட்புப் பணியை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்திலிருந்த இரண்டாவது வீரரைத் தேடும் பணி ஈரானின் உட்பகுதியில் இன்னும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எதிரி நாட்டு எல்லைக்குள் சிக்கியுள்ள வீரர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு முதலுதவி வழங்கி, பாதுகாப்பாக வெளியேற்றுவதே இந்தப் படையினரின் பிரதான நோக்கமாகும்.
ஈரானிய வான்பரப்பில் அமெரிக்க ஹெலிகொப்டர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் பறக்கும் காணொளிகள் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.