BREAKING NEWS

மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

மருத்துவர்களின் இடமாற்றச் செயல்முறைகளில் அரசியல் தலையீடுகள் காணப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (ஏப்ரல் 04) காலை 8:00 மணி முதல் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவு (OPD) மற்றும் வழமையான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அவசர சிகிச்சைகள், மகப்பேற்று, சிறுவர் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகள் இந்தப் பணிப்புறக்கணிப்பில் உள்வாங்கப்படவில்லை. அவை வழமை போல் இயங்கும்.

இடமாற்றப் பட்டியலில் இடம்பெற்ற முறைகேடுகள் சரிசெய்யப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு இடமாற்றங்களில் தலையிடும் அதிகாரிகளே பொறுப்பு என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.