பயிற்சி மருத்துவர்களின் நியமனங்களுக்கு எதிராக GMOA முன்னெடுத்துள்ள போராட்டம் அடிப்படையற்றது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நியமன முறையில் சிக்கல் இருந்தால், நோயாளிகளின் உயிரைப் பணயம் வைக்காமல் நீதிமன்றத்தை நாடுமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அரச சேவையில் இணைவதற்கான பயிற்சி மருத்துவர்களின் விண்ணப்பக் காலம் இன்று (ஏப்ரல் 04) நண்பகல் 12:00 மணியுடன் நிறைவடைந்தது.
இந்தக் காலக்கெடு நீடிக்கப்பட மாட்டாது என்றும், விண்ணப்பிக்கத் தவறியவர்கள் அரச சேவையில் இணையவோ, சம்பளம் பெறவோ முடியாது என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
அரசியல் தலையீடுகள் இருப்பதாகக் கூறி மருத்துவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது என நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டார்.