BREAKING NEWS

கொழும்பில் திறக்கப்பட்டது ‘சுவ செரிய’ அலுவலகம்.

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
கொழும்பில் திறக்கப்பட்டது ‘சுவ செரிய’ அலுவலகம்.

இலங்கையின் அவசர மருத்துவச் சேவையில் முன்னணியில் திகழும் 1990 ‘சுவ செரிய’ (Suwa Seriya) அம்பியூலன்ஸ் சேவையின் புதிய அலுவலகம், கொழும்பு 07, ஹோர்ட்டன் பிளேஸில் நேற்று (ஏப்ரல் 03) கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், இந்த புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு மாற்றங்கள் குறித்துப் பேசப்பட்டு வரும் வேளையில், ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா உட்பட பல முக்கிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றமை முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த புதிய அலுவலகமானது, நாடு தழுவிய ரீதியில் 1990 அம்பியூலன்ஸ் சேவையின் செயல்பாடுகளை மேலும் துரிதப்படுத்தவும், நவீனமயப்படுத்தவும் வழிவகுக்கும் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அவசர காலங்களில் நோயாளிகளின் உயிரைக் காப்பதில் ‘சுவ செரிய’ வகிக்கும் பங்கு அளப்பரியது என்றும், இந்த புதிய அலுவலகம் மூலம் சேவைகளை இன்னும் திறம்பட வழங்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.