BREAKING NEWS

ஈரானில் அமெரிக்க அதிகாரி அதிரடி மீட்பு: ட்ரம்ப் அறிவிப்பு!

DH
dhusanthi dhusi in உலகம்
Report
ஈரானில் அமெரிக்க அதிகாரி அதிரடி மீட்பு: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானில் வீழ்த்தப்பட்ட எப்-15இ (F-15E) போர் விமானத்தின் அதிகாரி, அந்நாட்டின் மலைப்பாங்கான பகுதியிலிருந்து அமெரிக்க இராணுவத்தால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் சவாலான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் இது ஒன்று என ஜனாதிபதி ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் இரு வேறு இடங்களில் சிக்கியிருந்த இரு அமெரிக்க விமானிகள் தனித்தனியே மீட்கப்பட்டுள்ளனர்.

காயங்களுடன் மீட்கப்பட்ட அதிகாரி தற்போது நலமாக இருப்பதாகவும், அமெரிக்கத் தரப்பில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.