BREAKING NEWS

ஈஸ்டர் தினத்தில் நீதிக்காக முழங்கிய சஜித்.

DH
dhusanthi dhusi in அரசியல்
Report
ஈஸ்டர் தினத்தில் நீதிக்காக முழங்கிய சஜித்.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது அரசின் அடிப்படைப் பொறுப்பு எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கடந்த மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் இதில் தோல்வியடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தாக்குதல் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்காதது தேசத்தின் பெரும் தோல்வி என சஜித் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையை வெளிப்படுத்துவதும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதும் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய துயரங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையே நம்பிக்கையையும் அமைதியையும் கட்டியெழுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.