நாளை (ஏப்ரல் 06) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிவர்த்தனைகளுக்கும் வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் (MDR) முழுமையாக நீக்கப்படுகிறது.
சிறு வியாபாரிகள் எவ்வித கூடுதல் செலவுமின்றி டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஏற்பதை ஊக்குவிப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.
தேசிய QR விழிப்புணர்வுத் திட்டத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை முறைப்படி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
QR பயன்பாட்டை ஊக்குவிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு வாராந்தம் மற்றும் மாதாந்தம் 1,000,000 ரூபாய் வரையிலான விசேட குலுக்கல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டை ‘சில்லறைக்காசு புழக்கம் குறைந்த’ (Cash-lite) பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதே இத்திட்டத்தின் இலக்காகும்.